Tuesday, June 30, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுடன் ஒப்பந்தம் ஒன்றும் இன்று கைச்சாத்திடப்பட்டது.

கொழும்பு சுகதாஸ உள்ளக அரங்கில் இன்று காலை ஆரம்பமான குறித்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.

அதற்கமைய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி,  மனோ கணேஷன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி,  பிரபா கணேஷன் தலைமையிலான மனித நேய மக்கள் கூட்டணி,  டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் காங்ரஸ்இ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தயாசிறி ஜயசேகர தரப்பு உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

அத்துடன் புதிய உறுப்பினர்களும் இக் கூட்டணியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments