Tuesday, June 30, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசாவகச்சேரி பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட டிப்பர்கள்

சாவகச்சேரி பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட டிப்பர்கள்

யாழ்.சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற ஐந்து டிப்பர் வாகனங்களை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் ஐவரை கைது செய்துள்ளனர்.

சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் நேற்றையதினம்(08) மூன்று டிப்பர் வாகனங்களும் நேற்று முன்தினம் இரண்டு டிப்பர் வாகனங்களும் கைப்பற்றப்பட்ட நிலையில் ஐந்து சந்தேக நபர்களும் கைதாகியுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் நேற்றையதினம்(08) சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் ஒருவர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments