தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், ஐக்கிய மக்கள் கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர்
சஜித் பிரேமதாசவுக்கும், இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று கையெழுத்தானது.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில்இ சஜித் பிரேமதாசவுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் திகாம்பரம், எம்பி உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மலையக தொழிற்சங்க முன்னணி செயலாளர் புஷ்பா, ஜனநாயக மக்கள் முன்னணி பிரசார செயலாளர், கேகாலை மாவட்ட அமைப்பாளர் பரணிதரன், கொழும்பு மாவட்ட அமைப்பாளர் பால சுரேஷ் குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

