Sunday, May 10, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபுத்தளத்தில் கஜமுத்துக்களுடன் மூவர் கைது

புத்தளத்தில் கஜமுத்துக்களுடன் மூவர் கைது

புத்தளம் பகுதியில் சுமார் 1 கோடி ரூபா 30 இலட்சம் ரூபாவிற்கு கஜமுத்துக்களை
விற்பனை செய்ய முயன்ற மூவர் நேற்று இரவு புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஜமுத்துக்களை விற்பனை செய்ய உள்ளதாக பாலாவி விமானப்படைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய,  புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருடன் இணைந்து குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சுற்றிவளைப்பு புத்தளம் கொழும்பு முகத்திடலுக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

இதன்போது 1 கோடி 30 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்ட 3 கஜமுத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போதுஇ புத்தளம் மற்றும் மாவனெல்ல பகுதிகளைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் ,  கைப்பற்றப்பட்ட கஜமுத்துக்களையும் மேலதிக நடவடிக்ககளுக்காக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments