Friday, May 8, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇலங்கை பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் உடனடி தடையை விதிக்கவேண்டும்

இலங்கை பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் உடனடி தடையை விதிக்கவேண்டும்

இலங்கை இராணுவம் தன்வசம் வைத்திருக்கும் காணிகளை விடுவிப்பதுடன் புதிதாக
காணிகளை கைவசப்படுத்துதலை நிறுத்தவேண்டும் என என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையின் மனித உரிமை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் முழுமையான அறிக்கையிலேயே இந்த வேண்டுகோள் இடம்பெற்றுள்ளது.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

இலங்கை இராணுவம் தன்வம் வைத்திருக்கும் காணிகளை விடுவித்தல்,  வடக்கு கிழக்கில் புதிதாக காணிகளை கைவசப்படுத்தலை நிறுத்துதல்,  பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைவரைம் விடுதல செய்தல்இ

பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் நினைவேந்தல் முயற்சிகளில் ஈடுபடுவதையும் குற்றச்செயல்களில் இருந்து நீக்கி,  அவற்றுக்கு ஆதரவளித்தல் போன்ற நம்பிக்கையை கட்டியெழுப்பும் வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம்
நிலைமாற்றுக்கால நீதிக்கான சூழலை உருவாக்கவேண்டும்.

மேலும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றச்சாட்டப்படுபவர்களை உயர் பதவிகளில் அமர்த்தக்கூடாது அவர்களை நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

அரசாங்கத்தின் உயர்பதவிகள்,  பாதுகாப்புதுறை,  இராஜதந்திர பதவிகள் என்பவற்றை வகிக்கும் நபர்கள் மீது மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகத்தன்மை மிக்க குற்றச்சாட்டுகள் வெளியானால்,  அவர்களை அதிகாரத்திலிருந்து நீக்குதலை முன்னெடுக்கவேண்டும். மேலும் அத்தகையவர்களை நியமனம் செய்தலை
தவிர்க்கவேண்டும்,

மேலும் நிலைமாற்றுக்கால நீதியை ஏற்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைப்பில் அவ்வாறான நபர்கள் இடம்பெற்றிருந்தால் அவர்களை நீக்கவேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் உடனடி தடையை விதிக்கவேண்டும்,அதற்கு பதிலாக முன்வைக்கப்படும் சட்டவாக்கம் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்துடன் பொருந்திச் செல்வதாக காணப்படவேண்டும். என்றுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments