Saturday, August 22, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவட்டுக்கோட்டை சந்திக்கு அருகாமையில் விபத்து

வட்டுக்கோட்டை சந்திக்கு அருகாமையில் விபத்து

வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த முதியவர் இன்றையதினம்
உயிரிழந்துள்ளார்.

அராலி மத்திஇ வட்டுக்கோட்டை,  கணவத்தை பகுதியைச் சேர்ந்த நடராசா (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் காலை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டுக்கோட்டை சந்தியில் இருந்து சித்தங்கேணி செல்கிற பக்கமாக அண்ணளவாக 150 மீற்றர்கள் தூரத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குறித்த முதியவர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments