Thursday, August 20, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கை14 இந்திய மீனவர்கள் கைது

14 இந்திய மீனவர்கள் கைது

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம்,  நெடுந்தீவு கடற்பரப்புக்குள் மூன்று படகுகளில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களே இன்று(07) மாலை கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களும் மீன்பிடிக்குப் பயன்படுத்திய 3 படகுகளுடன் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக் கொண்டு வரப்பட்டனர்.

அவர்கள்இ யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் நாளை ஒப்படைக்கப்பட்டு் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments