Wednesday, August 19, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமன்னார் வைத்தியசாலைக்கு இரண்டு சிறப்பு விருதுகள்

மன்னார் வைத்தியசாலைக்கு இரண்டு சிறப்பு விருதுகள்

உலக சுகாதார நிறுவனத்தினால் ஒவ்வொரு வருடமும் அனுஷ்டிக்கப்படும் சர்வதேச நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சின் சுகாதாரஇ தரம் மற்றும் பாதுகாப்பு பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய நிகழ்வு நேற்று கொழும்பில் இடம் பெற்றுள்ளது.

இதன் போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு,  நோயாளிகள் பாதுகாப்பு தொடர்பான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்திய வைத்தியசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் இரு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

இருநுாறுக்கும் மேற்பட்ட மத்திய மற்றும் மாகாண சுகாதார நிறுவனங்களுக்குள் அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற போட்டியில் வட மாகாணத்தில் இருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை மாத்திரமே குறித்த விருதை வென்றுள்ளமை குறிப்படத்தக்கது.

நிகழ்வில், இலங்கைக்கான பிரதிநிதி டாக்டர் அலோகா சிங்கா ,  சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் பாலித மஹிபால மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments