கடல் மார்க்கமாக இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக புத்தளம், கற்பிட்டி கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பீடி இலை பொதிகள் மற்றும் படகு என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
இந்த சுற்றிவளைப்பின் போது, 700 கிலோ கிராம் நிறையுடைய 22 பீடி இலை பொதிகள் மற்றும் படகு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் மேலதிக விசாரணைகளுக்காக கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

