Tuesday, June 23, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதேசிய மக்கள் சக்தியால் ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது

தேசிய மக்கள் சக்தியால் ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது

தேசிய மக்கள் சக்தியால் இந்த நாட்டில் ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது என
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

செம்மறி ஆட்டுத்தோல் அணிந்து வரும் குழுக்களால் மக்கள் ஏமாற மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய வழங்கிய நேர்காணலிலேயே மஹிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி நாடு முழுவதும் அலுவலகங்களை அமைத்தாலும் அவர்களால் ஆட்சிக்கு வர முடியாது. அலுவலகங்களைத் தவிர மக்களின் வாக்குகளால் தேசிய மக்கள் சக்தி தேர்தலில் வெற்றிபெற முடியாது. இதேவேளை ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் பாரிய உறவு
காணப்படுவதாகவும் ,  ரணில் விக்கிரமசிங்கவால் நாட்டை ஆள முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments