Monday, May 11, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமதுபான சாலைகளுக்கு பூட்டு

மதுபான சாலைகளுக்கு பூட்டு

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு செப்டம்பர் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

எனினும்,  மூன்று நட்சத்திர வகுப்பு வரம்பிற்கு அப்பால் உள்ள சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் சொகுசு விடுதிகள் மேற்கண்ட உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு,  குறிப்பிட்ட காலத்தில் தங்களுடைய விருந்தினர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு சேவை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,  கலால் திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 1913,  கலால் கட்டளைச் சட்டத்தை மீறும் சந்தர்ப்பங்கள் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடுகள் மற்றும் தகவல்களை வழங்கலாம்.

அவசர தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் என்று கலால் திணைக்களத்தின் பேச்சாளர் சன்ன வீரக்கொடி தெரிவித்தார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments