ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்குமாறு கோரி தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினரால்அறிக்கை ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
குறித்த அறிக்கையில்,
எமது அன்பார்ந்த தமிழீழ மக்களே!
2009 ஆண்டின் பின்னர் இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் எமது அரசியல் தலைமைகளின் அறிவுறுத்தலின்படி நீங்கள் அளித்த வாக்குகளைப் பெற்று ஆட்சி அதிகாரத்தில் ஏறிய எந்தவொரு சிங்களத் தலைவர்களும் தாம் அளித்த குறைந்த பட்ச வாக்குறுதிகளைக்கூட செயற்படுத்தவில்லை உறவுகளுக்கான நீதி அடைக்கப்பட்டிருக்கும் செய்யப்படவில்லை. தமிழரது இருப்பு நிலைபற்றிய உண்மையை கிரகித்து அவர்களது அரசியல் அபிலாசைகளை புரிந்துகொள்ள சிங்களதேசம் மறுத்து வருவதாலேயே தமிழ் மக்களது தேசிய இனப்பிரச்சனை தீர்வின்றிஇ முடிவின்றி சிக்கலடைந்து இழுபட்டு வருகின்றது. சிங்கள அரசியல் தலைமைகளிடமிருந்து நீதி கிடைக்கப் போவதும் இல்லை எமது உரிமைகளை நாமாகவே போராடி வென்றெடுக்க வேண்டும்.
தமிழீழ மக்களின் ஒரேயொரு பாதுகாப்பு கவசமாக இருந்துவந்த ஆயுதப் போராட்டம் 2009 மே யுடன் வலிந்து மௌனிப்பிற்குள் தள்ளப்பட்டதோடு மிகப் பெரும் இனவழிப்பு அரங்கேறியது. அன்றிலிருந்து தமிழர் தேசத்தினை சிங்களப் பேரினவாத பூதம் ஆக்கிரமித்து நிற்கின்றது.
தமிழீழத் தேசத்தின் விடுதலைக்காக தமிழ் மக்கள் புரிந்துள்ள மாபெரும் தியாகத்தை, அதன் ஆத்மீக மகத்துவத்தை, அதன் வரலாற்று முக்கியத்துவத்தை சிங்களதேசம் மட்டுமன்றிச் சர்வதேச சமூகமும் உணர்ந்து கொள்ளாதது
எமக்கு ஏமாற்றத்தையும் ,வேதனையையும் தருகின்றது. அன்றும் சரி இன்றும் சரி, தமிழரின் உணர்வுகளை, அவர்களது வாழ்நிலை அவலங்களை அவர்களது தேசிய அபிலாசைகளைச் சிங்களப் பெரும்பான்மை இனம் புரிந்து கொள்ளவில்லை, புரிந்து கொள்ள எத்தணிக்கவுமில்லை. புரிந்து கொள்ளும் ஆற்றலும், அறிவுத்திறனும் ஆன்ம பக்குவமும் அவர்கிளிடம் இருப்பதாகவும் தெரியவில்லை. இச்சூழலில் ஈழத்தமிழர் தேசிய இனமாக, தேசமாக தமது நீட்சியினை உலகிற்கு மீண்டும் ஒரு தடவை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. எனவே தமிழ் மக்கள் ஒரு தேசியஇனம் என்ற
அடிப்படையில் இறைமையையும், சுயநிர்ணய உரிமையையும் பிரயோகிப்பதற்கான ஒரு களமாக ஜனாதிபதி தேர்தலை கையாண்டு தமிழ் தேசிய பேரியக்கத்திற்கான தொடக்கப் புள்ளியாக தமிழ் பொது கட்டமைப்பால் வெளியிடப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளருக்கு உரிய தேர்தல் அறிக்கையானது அடிப்படைக் கோட்பாடு, நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளதாகவும், தமிழ் மக்கள் தமது தலை விதியினை தீர்மானிக்கக்கூடிய பொது வாக்கெடுப்பினை நோக்கிய தொடக்கப் புள்ளியாகவும் கருதுகின்றோம்.
சிங்கள ஆட்சியாளர்களால் எம்மக்கள் மீது கடந்த 76 வருடங்களாக நடத்திக் கொண்டிருக்கும் அட்டுழியங்களையும், அநீதிகளையும் இனப் படுகொலைகளையும், ஏமாற்று வழிமுறைகளையும் நாம் எமது அனுபவமாகக்கொண்டு சர்வதேச சட்டத்தின் படியும், ஐ.நா. தீர்மானங்களின் மூலமும் ஈழத்தமிழர்கள் சுயநிர்ணய உரிமைக்கும், பூரண சுதந்திரத்திற்கும் தகுதியானவர்கள் என்ற அடிப்படையில் எமது சுதந்திரத்திற்கான அரசியல் இறுதித்தீர்வு ஆணையாகவும், சனநாயக முறையிலும், ஐ.நா அல்லது சர்வதேச சமூகத்தினால் நடத்தி கண்காணிக்கப்படுகின்ற ஒரு பொதுவாக்கெடுப்பு மூலமாகதான் காணப்பட வேண்டும் என்ற திடமான நம்பிக்கையில் நாம் உள்ளோம்.
இச்சூழலில் ஈழத்தமிழர் தேசிய இனமாக, தேசமாக தமது திரட்சியினை உலகிற்கு சத்தமாய் உரத்து முழங்க வேண்டிய காலமாக இன்று இருக்கின்றது. இலங்கைத் தீவினை மையப்படுத்திய இந்திய பெருங்கடல் புவிசார் பூகோள அரசியலில், தமிழர் தேசத்தின் திரட்ச்சியினை வெளிக்காட்டுவதன் ஊடாகவே நாம் சக்திமிக்க ஓர் தரப்பாக வெளிகாட்டவேண்டிய அரசியல் சூழ்நிலை காணப்படுகின்றது. தேர்தல் அரசியலைக் கடந்து விடுதலை அரசியலின் முனைப்பாக தேசமாக, தேசிய இனத்தின் திரட்சியாக சங்கு சின்னத்திற்கு மட்டும் வாக்களிக்குமாறு இலங்கைத்தீவில் உள்ள தமிழர்களைஇ மற்றும் வாக்களிக்கத் தகுதியுள்ளபுலம்பெயர் தமிழர்களையும் உரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம். என்றுள்ளது.

