Sunday, May 10, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவாக்கு சீட்டை கிழித்த இளைஞன் யாழ்ப்பாணத்தில் கைது

வாக்கு சீட்டை கிழித்த இளைஞன் யாழ்ப்பாணத்தில் கைது

யாழ்ப்பாணத்தில் வாக்களிக்க வந்த இளைஞன் ஒருவர் வாக்கு சீட்டை கிழித்ததை அடுத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலையில் இன்றைய தினம் சனிக்கிழமை வாக்களிக்க சென்ற இளைஞன் இதனது வாக்காளர் அட்டையை காண்பித்து அடையாளத்தை உறுதிப்படுத்தி ,  வாக்கு சீட்டினை கைகளில் பெற்ற பின்னர் ,  வாக்களிக்காது இஅதனை கிழித்துள்ளார்.

அதனை அங்கிருந்த அதிகாரிகள் கவனித்து பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து இ பொலிஸார் இளைஞனை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் பொலிஸார் மற்றும் தேர்தல் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையின் போது ,  இளைஞன் தேர்தலில் வாக்களிப்பது இதுவே முதல் தடவை என தெரியவந்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவிற்கு சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ,  ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments