Sunday, May 10, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமன்னாரில் தேர்தல் நிலவரம்

மன்னாரில் தேர்தல் நிலவரம்

மன்னார் மாவட்டத்தில் மிகவும் சுமூகமான முறையில் தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில் நண்பகல் 12.30 மணிவரையான காலப்பகுதியில் 34 ஆயிரத்து 913 வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக மன்னார் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது’ மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 34 ஆயிரத்து 913 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.இது மொத்த வாக்குகளில் 38.53 வீதமாக காணப்படுகின்றது.

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 34 வீதமான வாக்குகளும்இநானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் 34 வீதமான வாக்குகளும்,  முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் 44 வீதமான வாக்குகளும்இ,  மடு பிரதேச செயலாளர்  பிரிவில் 46 வீதமான வாக்குகளும்,  மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 45 வீதமான வாக்குகளும்
இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட மக்கள் தற்போது ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.எனவே மன்னார் மாவட்ட மக்கள் நேர காலத்துடன் தாமதிக்காது உங்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களியுங்கள். இதனால் அசௌகரியங்களை தவிர்த்துக் கொள்ள முடியும்’ இவ்வாறு மன்னார் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்
க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments