Saturday, May 9, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கை72 வீத வாக்களிப்பு பதிவு

72 வீத வாக்களிப்பு பதிவு

வன்னி தேர்தல் தொகுதியில் எவ்விதமான வன்முறை சம்பவங்களும் இன்றி
சுமூகமான முறையில் தேர்தல் வாக்களிப்பு முடிவு பெற்றுள்ளது.

இந்த வகையில் வாக்காளர்களுக்கும் கடமையில் ஈடுபட்டிருந்த அரச உத்தியோகத்தர்கள்,  பொலிஸார் உட்பட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தில் 72 வீதம் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது. வாக்கு பெட்டிகள் வாக்கு எண்ணும் நிலையத்திற்கு பொலிஸாரின் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதேவேளை இன்னும் சில நேரங்களில் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று நள்ளிரவு அளவில் வன்னி தேர்தல் தொகுதியின் இறுதி முடிவுகளை அறிவிப்பதற்கு நாங்கள் முயற்சியை மேற்கொள்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments