Monday, June 29, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஅநுரவுக்கு வாழ்த்து தெரிவித்த சவுதி அரேபியத் தலைவர்கள்

அநுரவுக்கு வாழ்த்து தெரிவித்த சவுதி அரேபியத் தலைவர்கள்

இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அண்மைய தேர்தல் வெற்றிக்கு சவுதி அரேபியாவின் முக்கிய தலைவர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அதன்படி,  இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத் மற்றும் பட்டத்து இளவரசர் மொஹமட் பின் சல்மான் ஆகியோர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதாக சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சு எக்ஸ் கணக்கில் தெரிவித்துள்ளது.

அந்த செய்தியில் சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளதாவதுஇ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியாக அரசியலமைப்புப் பிரமாணம் செய்துகொண்ட அனுரகுமார திஸாநாயக்கவுக்கு இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர்
சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத் வாழ்த்துத் தந்தி அனுப்பியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுஇ இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியாக அரசியலமைப்புப் பிரமாணம் செய்துகொண்ட அனுரகுமார திஸாநாயக்கவுக்கு,  பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் மொஹமட் பின் சல்மானும் வாழ்த்துத் தந்தி அனுப்பியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments