Monday, August 10, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபொதுத் தேர்தலுக்காக 11 பில்லியன் ரூபா

பொதுத் தேர்தலுக்காக 11 பில்லியன் ரூபா

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொதுத் தேர்தலுக்காக 11 பில்லியன் ரூபாவை
விடுவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று தெரிவித்தார்.

பொதுத் தேர்தலுக்குத் தேவையான மொத்த நிதித் தொகையாக எதிர்பார்க்கப்படும் 11 பில்லியன் ரூபாவை விடுவிப்பதற்கான உரிய ஆவணத்தில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பிலான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது’ நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறும் என்றும் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் ஒக்டோபர் 4 எனவும்,  புதிய நாடாளுமன்றம் நவம்பர் 21 ஆம் திகதி கூடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments