Wednesday, August 12, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்; விசாரணைகளில் எந்த அநீதியும் இடம்பெறாது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; விசாரணைகளில் எந்த அநீதியும் இடம்பெறாது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளின் போது எந்த அநீதியும் இடம்பெறாது என
அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் உறுதியளித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் விசாரணைகள்
இடம்பெறுகின்றன. விசாரணைகளின் போது அரசாங்கம் என்ற அடிப்படையில் எந்த அநீதியும்
இடம்பெற அனுமதிக்கமாட்டோம். எவரையும் காப்பாற்ற மாட்டோம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு காரணமானவர்கள் அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகள்
எடுக்கப்படும். தாக்குதல் குறித்த விசாரணைகள் பூர்த்தியானதும் விசாரணைகள் மற்றும்
குற்றவாளிகள் என கண்டுபிடிக்கப்பட்டவர்களிற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து
பொதுமக்களிற்கு முழுமையான விபரங்களை வெளியிடுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments