Tuesday, August 11, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் அரசு வெளியிட்ட அறிவிப்பு

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் அரசு வெளியிட்ட அறிவிப்பு

நாட்டுக்கு அவசியமான 7 இலட்சத்து 50, 000 கடவுச் சீட்டுகளை இறக்குமதி செய்யவும்
இதற்கு முன்னர் அச்சிட்ட நிறுவனத்துக்கே அச்சிடும் பணிகளை ஒப்படைக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமையஇ ஒருதொகை கடவுச்சீட்டுகள் எதிர்வரும் சனிக்கிழமை நாட்டை வந்தடையும் என்று
அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்
செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 11ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடியதாக
அவர் தெரிவித்தார்.

இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமை போன்று கடவுச்சீட்டு வழங்கும் பணிகள்
ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இணையவழி கடவுச் சீட்டு தொடர்பில் நீதிமன்ற உத்தரவுக்கமையவே இறுதி தீர்மானம் எடுக்கப்படும்
என்றும் அவர் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments