Monday, August 10, 2026
https://thaaitv.com/
Homeஉலகம்எரிபொருள் தாங்கி விபத்து - 94 பேர் உயிரிழப்பு

எரிபொருள் தாங்கி விபத்து – 94 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவில் பெற்றோல் டேங்கர் லொறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில்
வெளியேறிய பெற்றோலை அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் சேகரிக்கச் சென்றபோதுவெடி விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில் 94 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் அதிகமானோர் படுயாகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நைஜீரியாவின் ஜிகாவா பகுதியில் பெற்றோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லொறி,  நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது நிலைத்தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

நள்ளிரவு ஏற்பட்ட இந்த விபத்தின்போது, டேங்கர் லொறியில் இருந்த பெற்றோல் கசிந்து வெளியேறியுள்ளது. அருகிலிருந்த மக்கள் டேங்கர் லொறியில் கசிந்த பெற்றோலை சேகரித்துள்ளனர்.

அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடிய வேளையில் டேங்கர் லொறி தீப்பிடித்து எரிந்தது.

சரக்கு ரயில் போக்குவரத்து நைஜீரியாவில் மிகப்பெரிய தோல்வியடைந்ததால்,  சாலைமார்க்கமாக டேங்கர் லொறிகளில் எரிபொருள்கள் எடுத்துச்செல்லப்படுகின்றன. இதனால்இ விபத்துகள் அடிக்கடி ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments