Thursday, June 25, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபோக்குவரத்து பொலிசார் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

போக்குவரத்து பொலிசார் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

யாழ். மாவட்ட பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் போக்குவரத்து
பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் இன்று
யாழ் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் யாழ் மாவட்ட சிரேஸ்ர பொலிஸ் அத்தியாச்சகர் லூட்சன் சூரிய பண்டாரா தலைமையில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் போக்குவரத்து பொலிசார் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி விரிவாக ஆராயப்பட்டதுடன்,  எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் கில்ட மல்கொட மற்றும் யாழ். பிரதான பொலிஸ் நிலையப் பரிசோதகர் பலியகேன உட்பட போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உத்தியோத்தர்கள் கலந்து கொண்டனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments