ஆசியரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யக்கோரி வவுனியா – செட்டிக்குளம்,
அரசடிக்குளம் கனிஷ்ட உயர்தர வித்தியாலயம் முன்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அரசடிக்குளம் கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் தரம் 03ம் வகுப்புக்கான ஆசிரியர் கடந்த 10 மாதங்களாக நியமிக்கப்படாமையால் மாணவர்களின் கல்வி கேள்விக்குரியாகியுள்ளதாக தெரிவித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களினால் குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய், வேண்டும் வேண்டும் ஆசிரியர் வேண்டும், வலயமே கண்கொண்டு திரும்பிப்பார் போன்ற பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

