Friday, June 26, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமுன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு பிணை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு பிணை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமானதாக கூறப்படும்
பதிவு செய்யப்படாத சொகுசு வாகனம் நட்சத்திர தர ஹோட்டல் வளாகத்தில் நிறுத்தி
வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான 5 சரீரப் பிணையில் விடுவிக்க அவரை கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

பதிவு செய்யப்படாத BMW கார் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சென்றிருந்த நிலையில்,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அண்மையில் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments