Friday, June 26, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபிரதமர் ஹரினியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு

பிரதமர் ஹரினியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும் இலங்கைக்கான சீனக் குடியரசின் தூதுவர் Qi Zhenhong ஆகியோருக்கிடையில் இன்று (30) பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இலங்கையின் வெள்ள நிவாரண முயற்சிகளுக்கு சீன அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்த தூதுவர்  இதனூடாக இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால தொடர்புகள் வலுப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த தீர்மானம்மிக்க காலப்பகுதியில் சீனக் குடியரசின் தாராள மனப்பான்மை மற்றும் ஒத்துழைப்புக்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்குமிடையிலான முதலீட்டு சந்தர்ப்பங்களை பலப்படுத்துவதற்கு எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உட்பட இரு நாடுகளினதும் ஒத்துழைப்புகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments