வடமாகாண ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்றுள்ள நா.வேதநாயகம் இன்றைய தினம்(01) கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட செயலாளர்இ வடமாகாண பிரதம செயலாளர், மாகாண காணி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்டத்தின் ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது, காணி சம்மந்தமான விடயம், மாவட்டத்தின் சட்டவிரோத மணல் அகழ்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

