Monday, August 10, 2026
https://thaaitv.com/
Homeஉலகம்அமெரிக்கவில் 47வது ஜனாதிபயை தெரிவு செய்யும் தேர்தல் இன்று

அமெரிக்கவில் 47வது ஜனாதிபயை தெரிவு செய்யும் தேர்தல் இன்று

உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்
இன்று இடம்பெறவுள்ளது.

இதன்படி 47வது அமெரிக்க ஜனாதிபதி தெரிவு செய்யப்படவுள்ளார்.

அந்த நாட்டின் நேரப்படி 5 ஆம் திகதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. இந்த மாகாணங்களின் புவியியல் அமைப்பின்படி கிழக்கு,  மத்திய பகுதி,  மலைப் பகுதி,  பசிபிக் பகுதி என 4 வகையான நேர விகிதங்கள் பின்பற்றப்படுகின்றன.

இதன்படி அமெரிக்க மாகாணங்களுக்கு இடையே ஒரு மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை வித்தியாசம் நிலவுகிறது.

அமெரிக்காவின் 50 மாகாணங்களில் அரிசோனா,  ஜோர்ஜியா,  மிச்சிகன், நெவாடா, நார்த் கரோலினா,  பென்சில்வேனியா,  விஸ்கான்சின் ஆகியவை அணி மாறும் மாகாணங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த 7 மாகாணங்களின் மக்கள்இ ஒருமுறை குடியரசு கட்சிக்கும்இ மறுமுறை ஜனநாயக கட்சிக்கும் மாறி மாறி வாக்களிக்கின்றனர்.

இந்த மாகாணங்களில் அட்லாஸ் இன்டல் என்ற நிறுவனம் கருத்துக் கணிப்பை நடத்தியது. இதன்படி அரிசோனாவில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்புக்கு 51.9 வீதம் பேரும்,  ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலாவுக்கு 45.1 வீதம் பேரும் ஆதரவு அளித்தனர்.

நெவாடாவில் ட்ரம்புக்கு 51.வீதம் பேரும்,  கமலாவுக்கு 45.9 வீதம் பேரும்இ நார்த் கரோலினாவில் ட்ரம்புக்கு 50.4 வீதம் பேரும், கமலாவுக்கு 46.8 வீதம் பேரும் ஆதரவு தெரிவித்தனர். இதர 4 மாகாணங்களிலும் ட்ரம்ப் முன்னிலையில் இருக்கிறார்.

மேலும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புக்காக 186.5 மில்லியன் பேர் தகுதி
பெற்றுள்ளதுடன் அவர்களில் இதுவரை 78 மில்லியன் பேர் வாக்களித்துள்ளதாக
சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments