நபரொருவர் தனது தாயின் மூன்று விரல்களை மரக்கட்டை ஒன்றின் மீது வைத்து
வெட்டிய அதிர்ச்சியான சம்பவமொன்று வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
ஹந்தபானாகலஇ புபுதுவெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
தாய்க்கு இவ்வாறான கொடூர செயலை செய்த மகன், பின்னர் தனது சகோதரியை
கத்தியால் தாக்கி படுகாயமடையச் செய்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான தாய் மற்றும் சகோதரி சிகிச்சைக்காக வெல்லவாய
ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தாயார்
மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு
மாற்றப்பட்டுள்ளார்.
மனிதாபிமானமற்ற தாக்குதலை மேற்கொண்ட நபரை பொலிஸார் தற்போது
கைது செய்துள்ளதுடன், அவர் 30 வயதுடையவர் எனவும் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பதுடன் மேலதிக
விசாரணைகளை வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு
வருகின்றனர்.

