Monday, August 10, 2026
https://thaaitv.com/
Homeஉலகம்அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்; ட்ரம்ப் அமோக வெற்றி

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்; ட்ரம்ப் அமோக வெற்றி

2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்
வெற்றிபெற்றுள்ளதாக பாக்ஸ் நியூஸ் தகவல் தெரிவித்துள்ளது.

இதன்படி வெற்றிக்கு தேவையான 270 இடங்களை கடந்து கூடுதலாக பெற்று ட்ரம்ப் முன்னிலை வகிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக ட்ரம்ப் விரைவில் பதவியேற்க உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.

2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவியில் அமர்ந்த ட்ம்ப் 2020 ஆம் ஆண்டு ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார்.

2020 ஆம் ஆண்டு தோல்விக்கு பின் மீண்டும் களமிறங்கிய ட்ரம்ப் நடந்து முடிந்த தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ளார்.

ட்ரம்பின் வெற்றியை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள்,  குடியரசுக் கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு ட்ரம்ப் 267 தேர்தல் கல்லூரி வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் 224 தேர்தல் கல்லூரி வாக்குகளை பெற்றுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மொத்தமுள்ள 538 தேர்தல் கல்லூரி வாக்குகளில் வெற்றிக்கு 270 வாக்குகள் தேவை.

வெற்றி குறித்து ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய ட்ரம்ப்,

இந்த நேரத்தில் உங்கள் மத்தியில் நான் மிகுந்த அன்பை உணர்கிறேன். மேலவையிலும் வெற்றியை பதிவு செய்துள்ளோம்,  இந்தளவு வெற்றியை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அமெரிக்காவுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்,  ஆனால் சட்டப்பூர்வமாக வர வேண்டும். எனக்காக பல பகுதிகளில் பிரசாரம் செய்த எலான் மஸ்கிற்கு நன்றி. துணை அதிபராக தேர்வாகும் ஜேடி வான்ஸ்-க்கு வாழ்த்துகள். அமெரிக்காவை மேலும் சிறந்த நாடாக மாற்ற உழைப்போம் என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments