Tuesday, August 11, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழ் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் மீது தாக்குதல்

யாழ் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் மீது தாக்குதல்

ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் பயணித்த கார் மீது இனம் தெரியாத நபர்களால் கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவர் தனது வீட்டில் இருந்து இன்று மாலை பிரச்சார பணிகளுக்காக காரில் பயணித்த போதே இவ்வாறு கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சசிகலா ரவிராஜ் காயங்கள் எதுவுமின்றி உயிர் தப்பியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சசிகலா ரவிராஜின் வீட்டிலுள்ள ஜன்னல் கண்ணாடிகள் கல் வீசி உடைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments