Thursday, October 1, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநாடாளுமன்ற தேர்தல்: வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுடன் நிறைவு

நாடாளுமன்ற தேர்தல்: வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுடன் நிறைவு

நாடாளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம்
இன்றுடன் (07) முடிவடைவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பிக்கப்பட்ட கடந்த 27 ஆம் திகதி முதல் இன்று வரை வாக்குச் சீட்டுகள் கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் நாளை (8) முதல் தபால் நிலையங்களுக்கு சென்று அவற்றை பெற்றுக் கொள்ளலாம்.

நாளை தொடக்கம் பொதுத் தேர்தல் நடைபெறும் நவம்பர் 14 ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை தபால் நிலையத்தில் பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும்,  அதற்காக தமது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தபால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments