Monday, August 10, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநுவரெலியாவில் வாக்குப்பெட்டிகள் கொண்டுசெல்லும் நடவடிக்கை

நுவரெலியாவில் வாக்குப்பெட்டிகள் கொண்டுசெல்லும் நடவடிக்கை

நாளை நடைபெறவுள்ள பொது தேர்தலை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்துக்கான
வாக்குப்பெட்டிகள் அனைத்தும் நுவரெலியா காமினி சிங்கள வித்தியாலயத்திலிருந்து
வாக்குச் சாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் 534 வாக்களிப்பு நிலையங்களில் 605, 292 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா – மஸ்கெலியா,  கொத்மலை,  ஹங்குராங்கெத்த,  வலப்பனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். மேலும்,  65 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்களிப்பு நிலையங்களில் அரச அதிகாரிகள் 10, 000 பேர் கடமையில் ஈடுப்பட்டுள்ளதோடு,  பாதுகாப்புக்காக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸாரும் 2, 500 பேர் கடமையில் ஈடுப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்திற்கான 08 நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்ய 17
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 11 சுயேட்சை குழுக்களை
பிரதிநிதித்துவப்படுத்தி 308 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பதும்
குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments