Monday, June 22, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவெள்ள நிலவரம் குறித்து முல்லைத்தீவில் அவசர கூட்டம்

வெள்ள நிலவரம் குறித்து முல்லைத்தீவில் அவசர கூட்டம்

முல்லைத்தீவில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பாக
ஆராய்வதற்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று(29) காலை பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஏற்பட்டுள்ள
வெள்ளப் பாதிப்புக்கள் தொடர்பாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது,

குறித்த கூட்டத்தில்,  பாராளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியூதீன்,  காதர் மஸ்தான்,  ம.ஜெகதீஸ்வரன்,  து.ரவிகரன்,  செ.திலகநாதன்,  ப.சத்தியலிங்கம்,  மற்றும் மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன், மேலதிக மாவட்ட செயலாளர் எஸ்.குணபாலன்,  பிரதேச செயலாளர்கள்,  அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள்,  ஏனைய திணைக்கள அதிகாரிகள்,  பொலிசார்,  இராணுவத் தரப்பு உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments