Monday, June 22, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபிரித்தானியக் குடியுரிமை பெற்ற புலம்பெயர் இலங்கையர் கட்டுநாயக்கவில் கைது

பிரித்தானியக் குடியுரிமை பெற்ற புலம்பெயர் இலங்கையர் கட்டுநாயக்கவில் கைது

பயங்கரவாத செயற்பாடுகளுக்காக நிதி சேகரித்த குற்றச்சாட்டில் பிரித்தானியக் குடியுரிமை பெற்ற இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரால் சேகரிக்கப்பட்ட பணம் கொழும்பு மற்றும் வன்னி பிரதேசத்தில் வசூலிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 2009 ஆம் ஆண்டு நாட்டை விட்டு பிரித்தானிய குடியுரிமை பெற்ற கிளிநொச்சி பகுதியை சேர்ந்த 43 வயதுடையவர் ஆவார்.

கொழும்பு – வடக்கு குற்றப் பிரிவினரால் கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பெறப்பட்ட பயணத்தடை உத்தரவுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மற்றும் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments