Friday, May 8, 2026
https://thaaitv.com/
Homeசினிமாசூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்

சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்

இன்று தனது 74 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் நடிகர் சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்திற்கு நடிகரும்,  தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான
விஜய் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில் ‘பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் ரஜினிகாந்த்,  அறுவைச் சிகிச்சை செய்ய மருத்துவமனையில் அனுமதியானபோதும்கூட,  ரஜினிகாந்த் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments