Tuesday, August 11, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் 214 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

யாழில் 214 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் சுமார் 214 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – காரைநகர் கசூரினா கடற்கரைக்கு அண்மித்த பகுதியில், இன்றைய தினம் காலை எரிபொருள் முடிவடைந்த நிலையில் படகொன்று கரையொதுங்கியுள்ளது.

படகு சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்டமையால் அதனை
புலனாய்வாளர்கள் சோதனையிட்ட போது ,  92 பொதிகளில் 213. 899 கிலோ கிராம்
கேரளா கஞ்சா படகினுள் காணப்பட்டுள்ளது.

அதனை அடுத்து ,  படகில் வந்த இருவரையும் கைது செய்து ,  படகில் மீட்கப்பட்ட
கஞ்சா பொதிகளையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை
பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments