Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமாவடிப்பள்ளி றோயல் பாலர் பாடசாலைகள் இறுதி ஆண்டு விழா

மாவடிப்பள்ளி றோயல் பாலர் பாடசாலைகள் இறுதி ஆண்டு விழா

மாவடிப்பள்ளி றோயல் பாலர் பாடசாலையின் மாணவர்களின் வருடாந்த இல்ல
விளையாட்டு போட்டி மற்றும் கலை நிகழ்ச்சியும், பரிசளிப்பும் நிகழ்வும் றோயல்
பாலர் பாடசாலையின் அதிபர் தலைமையில் மாவடிப்பள்ளி கமுஃகமுஃஅல்-அஸ்ரப்
மகா வித்தியாலய மைதானத்தில் இன்று நடைபெற்றது.

மாவடிப்பள்ளி றோயல் பாலர் பாடசாலை,  இறுதி ஆண்டு வருடாந்த கலை நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழாவுக்கு பிரதம அதிதிகளாக காரைதீவு பிரதேச செயலகத்தின் முன் பள்ளி உத்தியோகத்தர் ஏ.ஜெஸ்மி காரைதீவு பிரதேச செயலகத்தின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் கம்சதுல் கினாயா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் கௌரவ அதிதியாக மாவடிப்பள்ளி பெரிய பள்ளிவாசலில் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் மனாப் ஆசிரியர்இமாவடிப்பள்ளி கமுஃகமுஃஅல்- அஷ்ரப் மகா வித்தியாலய முதல்வர் ஏ.எல்.ரஜாப்தீன், ஆகியோர் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக றோயல் ஆசிரியர்கள் உட்பட மாணவர்களின் தாய்,  தந்தையர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாணவர்களுக்கு சான்றிதழ்கள்,  பரிசில்கள்,  நினைவு சின்னங்கள் வழங்கி பாராட்டப்பட்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments