Friday, June 26, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கை26 இலட்சம் ரூபா பணத்தினை மோசடி : பிரதான வர்த்தகர் கைது

26 இலட்சம் ரூபா பணத்தினை மோசடி : பிரதான வர்த்தகர் கைது

யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ்
புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்
நேற்று (16),  26 இலட்சம் ரூபா பணத்தினை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர்
கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக இந்த கைது
நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இவர் யாழ்ப்பாணத்தில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் பிரதான வர்த்தகர் என
தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை
எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments