Friday, June 26, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபெப்ரவரி முதலாம் திகதி முதல் வாகனங்கள் இறக்குமதி

பெப்ரவரி முதலாம் திகதி முதல் வாகனங்கள் இறக்குமதி

2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் தனியார் பாவனைக்கான
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வின் போது ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள்
படிப்படியாக அகற்றப்பட வேண்டியது அவசியம்.

வாகன இறக்குமதியைக் கொண்டு ஒரு தொழிற்துறை உள்ளது. தொழில் முனைவோர்
உள்ளனர். எனவே வாகன இறக்குமதியை நீண்ட காலத்திற்கு தடை செய்ய முடியாது.
இதன்படி மூன்று கட்டங்களாக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம்
திட்டமிட்டுள்ளது.

பயணிகள் போக்குவரத்துக்கான வாகனங்கள்,  சிறப்பு நோக்கங்களுக்காக
பயன்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் தனியார் பயன்பாட்டிற்கான
வாகனங்கள் உள்ளிட்டவை கட்டம் கட்டமாக இறக்குமதி செய்யப்படும்
என குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments