Saturday, October 3, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழிற்கு இனி மேலதிகமாக இரு புகையிரத சேவை

யாழிற்கு இனி மேலதிகமாக இரு புகையிரத சேவை

கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கு மேலதிகமாக இரு புகையிரத சேவையினை
ஆரம்பிக்கவுள்ளதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன்
தெரிவித்தார்.

நீண்டகாலமாக யாழ் – கொழும்பிற்கு ஒரேயொரு புகையிரத சேவை மட்டும்
இடம்பெற்று வருவதால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியிருந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பான பல்வேறு முறைப்பாடுகள் பொதுமக்களினால் என்னிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக ஆராய்ந்திருந்ததுடன் ,  போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர்
பிமல் ரத்நாயக்கவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தேன். எனது வேண்டுகோளிற்கு அமைவாக,  15ம் திகதியில் இருந்து ஒரு புகையிரத சேவையும்இ 31ம் திகதியில் இருந்து பிறிதொரு புகையிரத சேவையும் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments