Saturday, October 3, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமீண்டும் திடிரென அமைக்கப்படும் சோதனைச்சாவடி

மீண்டும் திடிரென அமைக்கப்படும் சோதனைச்சாவடி

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக இருந்து அகற்றப்பட்ட சோதனைச் சாவடிகள்
மீண்டும் திடிரென அமைக்கப்பட்டு வருகின்றமை பொது மக்கள் மத்தியில்
சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யுத்தத்தின் போதும் யுத்தம் முடிவுற்ற பின்னரும் கூட பல்வேறு இடங்களிலும்
சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இச் சோதனைச் சாவடிகளை அகற்றுமாறு அரசியல் கட்சிகளும் பொது மக்களும்
நீண்ட காலமாகவே கோரிக்கை விடுத்து வந்திருந்தனர்.

இந் நிலைமையில் நாட்டில் புதிய ஆட்சி மாற்றம ஏற்படுத்தப்பட்டு ஐனாதிபதி
அனுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு வந்து சென்ற பின்னர் இங்கு இருந்த
சோதனைச் சாவடிகள் அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டன.

இவ்வாறான நிலைமையில் அன்று திடிரென அகற்றப்பட்ட அந்தச் சோதனைச் சாவடிகள் தற்போது மீண்டும் அதே இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன.

மாற்றம் என்று கூறி புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள அனுர அரசாங்கம் சோதனைச் சாவடிகளை தாமே அகற்றுவதும் மீண்டும் தாமே அமைக்கின்ற இந்த நடவடிக்கை தொடர்பில் பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை பொது மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகத்தையும் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று தான் நீண்ட காலமாக பருத்தித்துறையில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாமை அகற்றுவதாக கூறிய போதும் இதுவரையில் அகற்றப்படாத நிலைமையே உள்ளமை குறிப்பிடத்தக்கது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments