Tuesday, June 23, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதிருகோணமலை மாவட்ட அரச அதிபராக டபிள்யு. ஜி. எம். ஹேமந்த குமார நியமிப்பு

திருகோணமலை மாவட்ட அரச அதிபராக டபிள்யு. ஜி. எம். ஹேமந்த குமார நியமிப்பு

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக இலங்கை நிருவாக சேவையையின்
விசேட தர அதிகாரி டபிள்யு. ஜி. எம். ஹேமந்த குமார நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சரவை இந்நியமனத்தை வழங்கியுள்ளது. (2003.09.01) ஆம் திகதி இலங்கை
நிருவாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட இவர்,  தெஹியத்தகண்டிய உதவி பிரதேச செயலாளர்,  பிரதேச செயலாளர்,  மத்திய மாகாண கைத்தொழில் அமைச்சின் உதவி செயலாளர்,  மத்திய மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர்,  மத்திய மாகாண விளையாட்டு திணைக்கள பணிப்பாளர் ( பதில் கடமை),  ஹதரலியத்த மற்றும் தும்பன பிரதேச செயலாளர் பதவிகளையும் வகித்துள்ளார்.

அரசாங்க அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட முன்னர்,  கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments