திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சூடக்குடா கடல் பகுதியில்
மர்ம பொருளொன்று இன்று (21) காலை கரையொதுங்கியுள்ளது.
இந்த பொருள் 12 அடி சுற்றளவும், 7 அடி நீளம் கொண்டதாகவும் காணப்படுகிறது.
இது என்ன பொருளென சரியாக இணங்காணப்படவில்லை.
பிரதேச மக்கள் கடற்கரையில் ஒதுங்கிய இதனை அவதானித்து, சம்பூர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.

