Saturday, July 4, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையோஷிதவை பார்வையிட சிஐடி பிரிவிற்கு விரைந்த நாமல்

யோஷிதவை பார்வையிட சிஐடி பிரிவிற்கு விரைந்த நாமல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷ,  இன்று(25) காலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை சேர்ந்த அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இந்நிலையில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட யோஷித ராஜபக்ஷவை பார்ப்பதற்காக அவரது சகோதரரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,  கொழும்பு சிஐடி பிரிவிற்கு இன்று வருகை தந்தார்.

இதன் போது அவர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்

எங்களுக்கு விசாரணை என்று தெரிவித்திருந்தால் நாங்கள் விடுமுறை என்று கூட பாராமல் வருகை தந்திருப்போம், ஆனால் எமது வாகன எரிபொருளை சேமித்து அரச செலவில் எங்களை கூட்டிச் செல்லலாம் என பொலிஸார் நினைத்தார்களோ தெரியாது.

அத்துடன் வரலாற்றில் அதிக கொலை குற்ற செயல்கள் நடைபெற்ற மாதமாக இந்த மாதத்தை காணலாம். அரசியல் பழிவாங்கல்களுக்கு துணை போகாமல்,  காவல்துறையானது இந்த கால நேரத்தை இந்த குற்ற செயல்களை தடுப்பதற்கு பாவித்து இருந்தால் பாரிய குற்றங்களை தடுத்திருக்கலாம்.

இதேவேளை நாங்கள் பொலிஸாருக்கும் ஏனைய காவல்துறையினருக்கும் நன்றி
தெரிவித்துக் கொள்கின்றோம்இ எம்மை பாதுகாப்பாக அழைத்து வந்து எம்மிடம் வாக்குமூலம் கேட்டமைக்காக. அத்தோடு,  தேங்காய் சம்பலோடு சாப்பாடு சாப்பிட்டது தான் நாங்கள் செய்த குற்றம். இது சந்தேகமின்றி அரசியல் பழிவாங்கலேயன்றி வேறு எதுவும் இல்லை. அரசியல் பழிவாங்கல் இல்லையானால் காலையிலேயே வாகனங்களை எடுத்துக் கொண்டு வந்து இம்மாதிரியான கைது நடவடிக்கைகளை பிரச்சாரப்படுத்துவார்களா? எனவும் தெரிவித்தார்.

அதேவேளை,யோஷித ரா ஜபக்சவை பார்வையிட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனைவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி சாணக்க மற்றும் அவருடன் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர்கள்,  முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments