Tuesday, October 6, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநாய் தூக்கிலிடப்பட்ட சம்பவம்; மாங்குளத்தில் பெண்ணொருவர் கைது

நாய் தூக்கிலிடப்பட்ட சம்பவம்; மாங்குளத்தில் பெண்ணொருவர் கைது

நாயை தூக்கிலிட்டு கொன்ற சம்பவம் தொடர்பில் வடமாகாண மாங்குளத்தை சேர்ந்த
48 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாயை தூக்கிலிட்டு கொன்ற சம்பவம் தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் அண்மையில் வைரலானதுடன்,  பலரின் கண்டனத்தையும் பெற்றது.

இது தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே மேற்கண்ட
சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட
பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

மாங்குளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது 48 வயதுடைய பெண் ஒருவர் இன்று (27) கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் 1907 ஆம் ஆண்டு இலக்கம் 13 ஆம் இலக்க
விலங்குகளுக்கு வன்கொடுமை செய்வதைத் தடுக்கும் கட்டளைச் சட்டத்தின் கீழ்
இந்த கைது இடம்பெற்றுள்ளது.

அதேநேரம்இ சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டானில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட
மோதலை தீர்க்கும் முகமாக ஆட்டை கடித்த நாயை தூக்கிலிட இணக்க சபையினர்
தீர்ப்பு வழங்கியதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்படத்தக்கது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments