Friday, May 8, 2026
https://thaaitv.com/
Homeசினிமாஒஸ்கார் விருதுகளை அள்ளிய அனோரா

ஒஸ்கார் விருதுகளை அள்ளிய அனோரா

2025ம் ஆண்டுக்கான 97வது ஒஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின்
லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விருது விழாவை
நகைச்சுவை நடிகர் கேனன் ஓ பிரைன் தொகுத்து வழங்கினார்.

இதில் சிறந்த திரைக்கதை, படத்தொகுப்பு, இயக்குநர், நடிகை, திரைப்படம் என
மொத்தமாக 5 விருதுகளை அனோரா திரைப்படம் குவித்துள்ளது.

இப்படத்திற்காக சிறந்த இயக்குநர், திரைக்கதை,  படத்தொகுப்பு,  சிறந்த படம் என
4 பிரிவுகளில் இயக்குநர் ஷான் பேகர் ஒஸ்கர் விருதுகளை வென்று வரலாற்று
சாதனை படைத்துள்ளார். ஒரே படத்திற்காக 4 விருதுகளை வென்ற முதல் நபர் என்ற
சாதனையையும் ஷான் பேகர் பெற்றுள்ளார்.

மேலும் அனோரா படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை மைக்கி மேடிசனும்,
‘தி ஃப்ரூடலிஸ்ட்’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை ஏட்ரியன் ப்ரோடியுன்
வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments