தென்னிந்திய நடிகர் கார்த்தி தனது வரவிருக்கும் படமான சர்தார் 2 படப்பிடிப்பின் போது காலில் காயம் அடைந்தார்.
சர்தார் 2 படக்குழு மைசூரில் சில முக்கியமான காட்சிகளை படமாக்கிக்கொண்டிருந்தபோது விபத்து நடந்தது.
இதையடுத்து கார்த்தி அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்,
அங்கு அவரது காயங்களின் அளவை மருத்துவர்கள் பரிசோதித்தனர்.
இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதுடன்இ ஒரு வாரம் ஓய்வெடுக்குமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கார்த்தி காயங்களிலிருந்து குணமடைந்தவுடன், படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

