Thursday, August 13, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவவுனியாவில் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

வவுனியாவில் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

வவுனியாப் பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்பாக பல்கலைக்கழக கல்வி சாரா
ஊழியர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.

தற்போதைய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் தமக்கு வழங்கப்பட்டு வருகின்ற கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் ஆளணி பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தே குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தினை அவர்கள் முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது ‘கடந்த காலத்தில் தமக்கு வழங்கப்பட்டு வந்த சில கொடுப்பனவுகள்
இம்முறை வரவு செலவு திட்டத்தில் அதிரடியாக குறைக்கப்பட்டு இருப்பதாகவும்,
சம்பள உயர்வு என்ற பெயரில் தமக்கான சம்பளம் குறைப்பு செய்யப்பட்டிருப்பதாகவும்’அவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக
ஊழியர் சங்கத்தினால் பல்கலைக்கழக முன்றலில் இன்றையதினம் கவனயீர்ப்பு
போராட்டமொன்று இன்று  இடம்பெற்றமை குறிப்பிடதக்கது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments