Friday, July 3, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் விபத்தில் சிக்கிய கனடாவாசிகள்

யாழில் விபத்தில் சிக்கிய கனடாவாசிகள்

கனடாவில் இருந்து வருகை தந்தவர்கள் பயணித்த கார் மதிலுடன் மோதி
விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச் சம்பவம் நேற்றிரவு(17) இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் நாவற்குழி மாதா கோவிலடி வீதியூடாக பயணித்த காரானது
வேகக் கட்டுப்பாட்டை இழந்து,  வீதியோரத்தில் உள்ள மாதா கோவிலின் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இருப்பினும் இந்த விபத்தின்போது வாகனத்தில் பயணம் செய்த மூவருக்கும் எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை.

கனடாவில் இருந்து வந்த பெண் ஒருவர், அவரது கணவர் மற்றும் 5வயது மதிக்கத்தக்க
பெண் குழந்தை ஆகியோர் பயணித்த காரே இவ்வாறு விபத்தில் சிக்கியது.நித்திரை கலக்கமே விபத்துக்கான காரணம் என அறியமுடிகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments