Monday, June 29, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபொலிஸ் நிலையத்தில் ஆஜரான யோஷிதவும் அவரது மனைவியும்

பொலிஸ் நிலையத்தில் ஆஜரான யோஷிதவும் அவரது மனைவியும்

கொழும்பில் உள்ள இரவு விடுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில்
வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன்
யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில்
ஆஜராகியுள்ளனர்.

கொழும்பு யூனியன் பிளேசில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதிக்கு கடந்த
வெள்ளிக்கிழமை (21) இரவு யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவியுடன்
குழுவொன்று சென்றுள்ளது.

இதன்போது,  இரவு நேர களியாட்ட விடுதிக்கு வெளியில் யோஷித ராஜபக்ஷவுடன் சென்ற குழுவுக்கும் களியாட்ட விடுதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

மோதலின் போது யோஷித ராஜபக்ஷவுடன் சென்ற குழுவினர் களியாட்ட விடுதியின்
பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

இந்த மோதல் சம்பவம் இரவு நேர களியாட்ட விடுதிக்கு வெளியில் உள்ள சிசிரிவி
கமராவில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக யோஷித ராஜபக்ஷவும்
அவரது மனைவியும் கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தில் இன்றைய தினம்
ஆஜராகியுள்ளனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments