Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் அடுத்தடுத்து உயிரிழப்பு

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் அடுத்தடுத்து உயிரிழப்பு

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வேன் விபத்தில் உயிரிழந்த களனி
பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் உளவியல் பிரிவு பிரதானி,  சிரேஸ்ட
விரிவுரையாளர் கலாநிதி என்.டி.ஜி. கயந்த குணேந்திரவின் மனைவியும் காலமானார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்
இன்று உயிரிழந்தார்.

இதன்படி,  இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக
அதிகரித்துள்ளது.

கடந்த 18 ஆம் திகதி களனி பல்கலைக்கழக தத்துவ ஆய்வுகள் துறையின் உளவியல்
பிரிவின் தலைவராகப் பணியாற்றிய 46 வயதுடைய பேராசிரியர் ஒருவர் தனது
மனைவி,  3 பிள்ளைகள் மற்றும் மனைவியின் தாய் மற்றும் சகோதரனுடன்
யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாச் சென்றுவிட்டு வேனில் மீண்டும் வீடு நோக்கிப்
பயணித்துள்ளனர்.

இதன்போது குருநாகல் பகுதியிலிருந்து மீரிகம நோக்கி பயணித்த இந்த வேனானது
வீதியில் பயணித்த லொறி ஒன்றின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது, வேனின் பயணித்த களனி பல்கலைக்கழக பேராசிரியரும், அவரது
மனைவியும்,  3 பிள்ளைகளும் மனைவியின் தாய் மற்றும் சகோதரனும்
படுகாயமடைந்த நிலையில் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்
களனி பல்கலைக்கழக பேராசிரியர் உயிரிழந்தார்.

இதனையடுத்து விபத்தில் படுகாயமடைந்த களனி பல்கலைக்கழக பேராசிரியரின்
மனைவியும் , 3 பிள்ளைகளும் , மனைவியின் தாய் மற்றும் சகோதரனும் மேலதிக
சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

பின்னர் களனி பல்கலைக்கழக பேராசிரியரின் 3 பிள்ளைகளும் மனைவியின் தாயும்
சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில் மனைவியின் சகோதரன் சிகிச்சை
பலனின்றி உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில்,  கொழும்பு தேசிய வைத்தியசாலைக்யில் சிகிச்சை பெற்ற வந்த களனி
பல்கலைக்கழகத்தின் பேராசிரியரின் மனைவியும் இன்றைய தினம் சிகிச்சை
பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments